குடியாத்தம் கெங்கை அம்மன் கோவில் தேரோட்டம் இன்று நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழா காப்புக் கட்டுதலுடன் மே 1ம் தேதி தொடங்கி கடந்த 11-ந் தேதி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
நாளை கெங்கையம்மன் சிரசு திருவிழா நடைபெறும் நிலையில் இன்று கெங்கையம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது
கோவிலில் கெங்கையம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், அதை தொடர்ந்து உற்சவர் அலங்கரிக்கப்பட்ட தேரில் வைக்கப்பட்டது.
பின்னர் தேர் கெங்கையம்மன் கோவிலில் இருந்து தரணம்பேட்டை, நடுப்பேட்டை வழியாக சென்றது இதில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
வழிநெடுகிலும் பக்தர்கள் உப்பு, மிளகு ஆகியவற்றுடன் நாணயங்கள் தேர் மீது இறைத்து வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
மேலும் ஆடு, கோழிகளை பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர் வேலூர் எஸ்பி மணிவண்ணன் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதில் எம்எல்ஏ, நகராட்சி தலைவர் , உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து நாளை கெங்கையம்மன் சிரசு நடைபெறுகிறது.