கும்பகோணத்தில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணி நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில், தமிழகத்தில் மத அடிப்படையில் பகைமையை ஏற்படுத்தி அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும் பாசிச பா.ஜ.க,ஆர்.எஸ்.எஸ் அமைப்பினை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்
என மக்களிடையே தொடர்ந்து பரப்புரை மேற்கொள்ளவும், சமூக நல்லிணக்கத்தினை பாதுகாக்கவும் தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்கம் மற்றும்
மனித சங்கிலி பேரணி நேற்று மாலை கும்பகோணம் பொற்றாமரை குளம் முதல் சுமார் 1 கிலோ மீட்டர் வரை சமூக நல்லிணக்க பேரணி நடைபெற்றது.
மனித சங்கிலி பேரணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ், திராவிடர் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, இந்திய சமூக ஜனநாயக கட்சி, சிபிஐ எம்.எல், தேசிய முற்போக்கு திராவிட கழகம்,நாம் தமிழர் கட்சி, மக்கள் அதிகாரம், மனிதநேய மக்கள் கட்சி,
இந்திய ஜனநாயக கட்சி, தமிழ் புலிகள் கட்சி, தமிழர் தேசிய முன்னணி, பெரியாரிய உணர் வாளர்களின் கூட்டமைப்பு, கிறிஸ் துவ நல்லெண்ண இயக்கம், அகில இந்திய கிறிஸ்தவ கூட்டமைப்பு, அறநெறி மக்கள் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி, தாளாண்மை உழவர் இயக்கம்,மே 17 இயக்கம் ஆகிய அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து பேரணியை நடத்தினர்.
விடுதலை சிறுத்தை மண்டல செயலாளர் வழக்கறிஞர் விவேகானந்தன் தலைமையில் கும்பகோணம் மேயர் சரவணன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் பாரதி உள்பட பேரணியில் அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.