கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பஜார் பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு நிரந்தர இடம் ஒதுக்க வேண்டி சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை முற்றுகை.
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பஜார் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். தற்போது நடைபெற்று வரும் சாலை விரிவாக்க பணியாள் சாலை ஓரம் வியாபாரம் செய்து வந்த கடைகள் அதிரடியாக அப்புறப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து கடைகள் அமைக்க நிரந்தர இடம் வேண்டி பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதேபோல் ஆரம்ப சுகாதார நிலையம் நியாய விலை கடை அமைக்க தேவையான அரசு நிலத்தை தனிநபர் ஆக்கிரமித்தது குறித்தும் பலமுறை புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்து வந்த நிலையில் இன்று திடீரென நூற்றுக்கும் மேற்பட்ட சாலை வியாபாரிகள் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் ஸ்தம்பித்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆரம்பாக்கம் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் இது குறித்து விரைந்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் இதனால் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.