BREAKING NEWS

கும்மிடிப்பூண்டி அருகே 2023 வரிகளில் 5 மணி நேரம் 50 நிமிடம் கவிதை எழுதி கிராமத்துப் பெண் உலக சாதனை.

கும்மிடிப்பூண்டி அருகே 2023 வரிகளில் 5 மணி நேரம் 50 நிமிடம் கவிதை எழுதி கிராமத்துப் பெண் உலக சாதனை.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த செங்கல் சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் திலகவதி பாஸ்கர் (35) அரசு பள்ளியில் தமிழ்வழியில்‌ பயின்ற இவர் 50 தலைப்புகளில் 50 கவிதை, 500-க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 10- க்கும் மேற்பட்ட தொகுப்பு நூல்கள் என பல்வேறு சாதனை படைப்புகளைப் படைத்துள்ளார்.

இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டை நினைவு கூறும் வகையில் திலகவதி பாஸ்கர் என்ற தலைப்பில் 2023 வரிகள் கொண்ட ஒரு கவிதையை 5 மணி நேரம் 50 நிமிடங்கள் எழுதி உலக சாதனை புத்தகம் மற்றும் ஆல் இந்திய புக் ஆஃப் ரெகார்ட், சேவே வேர்ல்ட் ரெகார்ட் ஆகிய புத்தகத்தில் இடம் பிடித்தார்.

மேலும் கல்வியே ஆயுதம் எனக் கருதி அவர் வசித்து வரும் பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவச பாடம் கற்பித்து வரும் இவர் பைந்தமிழ் மாமணி விருது, விருத்த பாமணி விருது, மரபு மாமணி விருது, பாரதியார் விருது, ஆசுகவி விருது, சிறந்த பெண் சாதனையாளர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றதுடன் , ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், ஜெட்லி புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய சாதனை புத்தகங்களிலும் இடம் பிடித்துள்ளார். இவரது சாதனையை பாராட்டி தமிழ் மாமணிகளும், தமிழ் அறிஞர்களும் இவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

CATEGORIES
TAGS