BREAKING NEWS

கூடலூர் அருகே தேவன் எஸ்டேட் பகுதியில் காலில் காயத்துடன் சுற்றித்திரிந்த சிறுத்தை புலி கூண்டில் சிக்கியது.

கூடலூர் அருகே தேவன் எஸ்டேட் பகுதியில் காலில் காயத்துடன் சுற்றித்திரிந்த சிறுத்தை புலி கூண்டில் சிக்கியது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பொன்வயல் அருகே உள்ள சுனில் என்பவருக்கு சொந்தமான காப்பி தோட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக சிறுத்தை ஒன்று நடமாட முடியாமல் காலில் காயத்துடன் உலா வந்தது.

இந்த சிறுதையின் நடமாட்டம் குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்ததன் அடிப்படையில் வனத்துறையினர் சிறுத்தையை கடந்த 3 நாட்களாக முழுமையாக கண்காணித்ததில் சிறுத்தையின் காலில் பலத்த காயத்துடன் நடமாட முடியாமல் காப்பி மற்றும் தேயிலை தோட்டத்தில் பதுங்கி உள்ளது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுத்தையை பிடித்து அதற்கு சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்தும், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கால்நடை மருத்துவர் ராஜேஷ் தலைமையில் வனத்துறையினர் காப்பி மற்றும் தேயிலைத் தோட்டத்தில் பதிங்கியுள்ள சிறுத்தையை தேடி வந்தனர்.

அதுமட்டுமின்றி சிறப்பு பயிற்சி பெற்ற வன ஊழியர்கள் சிறுத்தையை தேடி வரும் நிலையில் தானியங்கி கேமரா மற்றும் கூண்டு அமைத்து பிடித்து சிறுத்தைக்கு சிகிச்சை அளிக்க வனத்துறையினர் திட்டமிட்டனர்

சிறுத்தை பிடிப்படும் வரை அப்பகுதி கிராம மக்கள் தனியாக காபி மற்றும் தேயிலை தோட்டங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும், எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

தேவன் எஸ்டேட் காப்பி தோட்டம் மற்றும் தேயிலை தோட்டங்களில் கடந்த 3 நாட்களாக காயத்துடன் சுற்றித்திரிந்த சிறுத்தையை வனத்துறையினர் பிடித்து சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர்.அதன்படி இரண்டு இடங்களில் கூண்டு அமைத்தும் இரண்டு இடங்களில் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்படும் கால்நடை மருத்துவ குழுவினர் வனத்துறை உதவியுடன் சிறுத்தை தேடி வந்த நிலையில் இன்று காலை தேவன் எஸ்டேட் 2 தேயிலைத் தோட்டத்தில் வைக்கப்பட்ட கூண்டில் சிறுத்தை சிக்கியது.

சிறுத்தை சிக்கிய இடத்திற்கு முதுமலை புலிகள் கால்நடை மருத்துவர் ராஜேஷ் தலைமையில் சிகிச்சை அளிக்க வனத்துறை திட்டமிட்டுள்ளனர்.

சிறுத்தை ஆக்ரோஷமாக காணப்படுவதால் கூண்டை வனத்துறையினர் துணிகளை போற்றி பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர். மேலும் கால்நடை மருத்துவர் சிறுத்தைக்கு சிகிச்சை அளித்த பின் அடர்ந்த வனப்பகுதிக்குள் சிறுத்தையை விடுவிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

CATEGORIES
TAGS