கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கோத்தர்வயல் பகுதியில் இரண்டு இளைஞர்கள் கஞ்சா விற்பதாக கூடலூர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது
நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கோத்தர்வயல் பகுதியில் இரண்டு இளைஞர்கள் கஞ்சா விற்பதாக கூடலூர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது, தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற கூடலூர் போலீசார் அந்த இரு இளைஞர்களையும் கையும் களவுமாக மடக்கி பிடித்தனர்.
பின்பு அவர்களிடமிருந்து விற்பனைக்கு வைத்திருந்த 30 பாக்கெட் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் முஹம்மது ரியாஸ் 22, நிஷார் அகமது 19 ஆகியோரை கூடலூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர் விசாரணையில் இவர்கள் மீது ஏற்கனவே இருவர் மீதும் 2022, 23, 24, ஆகிய மூன்று வருடங்களில் இவர்கள் மீது இரண்டு, மூன்று கஞ்சா வழக்குகள் உள்ளது தெரிய வந்த நிலையில் அவர்களை கைது செய்த போலீசார் கூடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர், சமீப காலங்களாக இளைஞர்கள் மத்தியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் தாராளமாக கிடைப்பதாக அப்பகுதி பெற்றோர்கள் வேதனையில் உள்ளனர்.