கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் உள்ள சாலைகள் பள்ளங்களாக மாறியதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் அவதி.
கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் உள்ள சாலைகள் பள்ளங்களாக மாறியதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் அவதி.
திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் அதிகம் வருவது வழக்கம் இந்நிலையில் ஏரிச்சாலையில் இருந்து பிரசித்தி பெற்ற குறிஞ்சி ஆண்டவர் கோயில் பள்ளங்கி, வில்பட்டி, கோவில்பட்டி கோம்பை போன்ற பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் பிரதான சாலையாக நாயுடுபுரம் சாலை அமைந்துள்ளது.
இந்நிலையில் அப்பகுதிக்கு இருசக்கர வாகனங்கள்,அரசு பேருந்து மேலும் நாயுடு சாலையில் அமைந்துள்ள தீயணைப்புத்துறை வாகனங்கள் செல்லும் பிரதான சாலையாக உள்ளது கடந்த மாதங்களாகவே சாலையில் பயன்படுத்துவது மிகவும் சிரமமாக உள்ளது இதனை கண்டுகொள்ளாமல் இருக்கும் அரசு அதிகாரிகள் உடனடியாக சாலையை சீரமைத்து பொதுமக்களுக்கு இடையூறாத பயணத்தை கொடுத்து கொடுக்க வேண்டும் என்பது கோரிக்கையாக எழுந்து வருகிறது.
மேலும் இதனால் நாயுடுபுற சாலையில் 4 மணி நேரம் காத்திருந்து செல்லும் அவல நிலை சுற்றுலாப் பயணிகளுக்கும் அப்பகுதி மக்களுக்கும் ஏற்பட்டு வருகிறது மேலும் இரண்டு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் அடிக்கடி கீழே விழுவதாகவும் 4 சக்கர வாகனங்கள் இப்பள்ளத்தில் மாட்டிக் கொள்வதால் காலை மாலை பள்ளி கல்லூரி மற்றும் வேலை சென்று வீடு திரும்பும் இவ்விடத்தில் மாட்டிக்கொண்டு அதிக நேரம் காத்திருக்கும் நிலைமை உள்ளது.
இதனை நெடுஞ்சாலைத் துறை கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறது நெடுஞ்சாலைத் துறையின் அதிகாரிகள் யாரும் வந்து பார்க்கவில்லை என்பது இப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது