.கோபி அருகே எச்சரிக்கையை மீறி குப்பைகளை கொட்டி வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை.
கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கலிங்கியம் ஊராட்சிக்குட்பட்ட சென்னியப்பா நகர் பாரதி நகர் மல்லிகை நகர் காமதேனு கார்டன் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 1000க்கும் மேற்பட்டோர்வசித்து வருகின்றனர்.
இந்தப் பகுதி வழியாக செல்லும் ஓடையில் இரவு நேரங்களில் கோழி இறைச்சி கழிவுகள், பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை கொட்டி வருகின்றனர்,
மேலும் அங்கு கொட்டப்பட்ட கழிவுகளுக்கு அடிக்கடி தீ வைத்து எரிப்பதால் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிப்பதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது
இதனால் அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றியுள்ள நகர் பகுதி பொதுமக்கள் இந்த நச்சு வாய்வை சுவாசிப்பதால் ஆஸ்துமா மூச்சுத்திணறல் புற்றுநோய் பல்வேறு நோய்த்தொற்று அபாயங்களுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.மற்றும் இந்த ஓடையில்குப்பை கொட்டுவதால் நிலத்தடி நீர் மற்றும் காற்று மாசுபடும் அபாயம் உள்ளது
இதுகுறித்த அப்பகுதி பொதுமக்கள் பலமுறை கலிங்கியம் ஊராட்சியில் புகார் அழைத்ததன் விளைவாக அப்பகுதியில் கலிங்கியம் ஊராட்சி சார்பில் எச்சரிக்கை பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது
அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பலகை வைத்த பின்பும் எச்சரிக்கையை மீறி இரவு நேரங்களில் அப்பகுதியில் குப்பைகளை கொட்டிச் செல்லும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்…