கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் 24 மணி நேரமும் செவிலியர்கள் பணிபுரிந்திட வேண்டும் என வலியுறுத்தி மாவீரன் பகத்சிங் ரத்ததான கழக அறக்கட்டளை சார்பில் சங்கு ஊதும் போராட்டம்.
கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் 24 மணி நேரமும் செவிலியர்கள் பணிபுரிந்திட வேண்டும் என வலியுறுத்தி மாவீரன் பகத்சிங் ரத்ததாக கழக அறக்கட்டளை சார்பில் சங்கு ஊதும் போராட்டம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களின் வேலை நேரத்தை உறுதிப்படுத்த வேண்டும். தீ புண் காயம், நரம்பியல், தோல், ஸ்கேன், எக்கோ மருத்துவர்களை நியமனம் செய்ய வேண்டும். மஞ்சள் காமாலை, வலிப்பு நோய்களுக்கு உரிய அனைத்து வகையான மருந்துகளும் தடையில்லாமல் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
இரவு மற்றும் விபத்து காலங்களில் உடனடியாக சி.டி.ஸ்கேன் எடுக்க வேண்டும். ஆய்வக நுட்பநர்கள் அதிகப்படுத்தி, அனைத்து விதமான ரத்த பரிசோதனைகளும் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்ய வேண்டும். கோவில்பட்டியில் இணை இயக்குநர் அலுவலகத்தை அமைக்க வேண்டும. ரத்த வங்கியில் 24 மணி நேரமும் செவிலியர்கள் பணிபுரிந்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாவீரன் பகத்சிங் ரத்ததாக கழக அறக்கட்டளை சார்பில் சங்கு ஊதும் போராட்டம் நடைபெற்றது.
பகத்சிங் ரத்ததான கழக தலைவர் காளிதாஸ், எம்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில். ரவிக்குமார் முன்னிலையில். பெஞ்சமின் பிராங்கிளின், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் ராஜசேகர், 5-ம் தூண் நிறுவனர் சங்கரலிங்கம் ஆகியோர் பேசினர். இதில், சமூக ஆர்வலர் மாரிமுத்து, ராஜேஷ் கண்ணா, பகத்சிங் ரத்ததான கழக பொருளாளர் மணிகண்டன், வேல்முருகன், ராமர், லட்சுமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சங்கு ஊதி, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.