கோவில்பட்டி அருகே மகளிர் சுய உதவிக் குழு வில் பெண்கள் பெற்ற கடன் தள்ளுபடி விவகாரத்தில் முறைகேடு நடப்பதாக கூறி பெண்கள் எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
![கோவில்பட்டி அருகே மகளிர் சுய உதவிக் குழு வில் பெண்கள் பெற்ற கடன் தள்ளுபடி விவகாரத்தில் முறைகேடு நடப்பதாக கூறி பெண்கள் எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் கோவில்பட்டி அருகே மகளிர் சுய உதவிக் குழு வில் பெண்கள் பெற்ற கடன் தள்ளுபடி விவகாரத்தில் முறைகேடு நடப்பதாக கூறி பெண்கள் எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்](https://aramseithigal.com/wp-content/uploads/2022/05/WhatsApp-Image-2022-05-24-at-5.32.44-PM-1.jpeg)
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரம் உள்ள இளம்புவனம் பகுதியைச் சேர்ந்த மகளிர் சுய உதவி குழு பெண்கள் மகளிர் சுய உதவிக்குழு மூலம் கடன் பெற்று அதனை முறையாக செலுத்தியதும் மீண்டும் கடன் பெற்றும் அவர்கள் செலுத்தி வந்ததும் தெரியவந்தது இந்நிலையில் தமிழக அரசு அறிவித்த பயிர்க் கடன் நகைக் கடன் மகளிர் சுய உதவி குழு கடன் உள்ளிட்ட அறிவிப்புகளை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் அதற்காக உரிய அதிகாரியிடம் சென்று தாங்கள் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்பட்டதா என்று குறித்து கேட்டபோது.
அதற்கு எதில் குறைவாக கடன் பெற்றுள்ளனர் அது தள்ளுபடி எனவும் நகை கடன் பெற்றதை திரும்ப செலுத்தச் சொல்லி வற்புறுத்தவும் எனவே இதில் முறைகேடு நடப்பதாக கூறி அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மகளிர் சுய உதவி குழு தலைவி பாக்கியலட்சுமி தலைமையில் எட்டயாபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வட்டாட்சியரை சந்தித்து மனு அளித்தனர் தங்கள் மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
பின்னர் மகளிர் சுய உதவி குழு தலைவி பாக்கியலட்சுமி கூறுகையில் :
தமிழக அரசு அறிவித்த மூன்றுவிதமான தள்ளுபடியில் மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி என்பது எங்கள் கூட்டுறவு சங்கத்தின் குறைந்த அளவுள்ள பணம் உள்ள குழுவுக்கு மட்டும் தள்ளுபடி அறிவித்துள்ளது. இதனால் நூறுக்கு மேற்பட்ட எங்களை போன்ற குழுவில் உள்ள பெண்கள் யாருக்குமே தள்ளுபடி அறிவிப்பு இல்லை எனவே இது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.