கோவில்பட்டியில் வீட்டின் ஜன்னலை உடைத்து 20 பவுன் தங்க நகை கொள்ளை. போலீசார் விசாரணை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலை முல்லை நகர் பகுதியில் வசித்து வருபவர் குமரன் (54) இவர் கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தில் டெப்டி பீடிஓ வாக பணிபுரிந்து ஒரு வருடத்திற்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.
இவரது மனைவி ருக்குமணி ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவரும் நேற்று கோவில்பட்டி அருகேயுள்ள துரைச்சாமிபுரத்தில் வசிக்கும் அவரது சகோதரி வேளீஸ்வரியின் வீட்டிற்கு சென்று இரவில் அங்கே தங்கியுள்ளனர்.
பின்னர் இன்று வீடு திரும்பி கதவைத் திறந்து பார்த்தபோது படுக்கையறை ஜன்னல் உடைக்கப்பட்டு நகை பெட்டிகள் அனைத்தும் கட்டிலில் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து இது குறித்து மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவானந் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சந்தேகத்திற்குறிய கைரேகைகளை ஆய்வு செய்தனர். மேலும் இதுகுறித்து கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.