BREAKING NEWS

சங்ககிரி ஞாயிறு சந்தையில் திமுக தேர்தல் பிரசுரங்களை வழங்கி நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் மாதேஸ்வரன் ஓட்டு சேகரிப்பு

சங்ககிரி ஞாயிறு சந்தையில் திமுக தேர்தல் பிரசுரங்களை வழங்கி நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் மாதேஸ்வரன் ஓட்டு சேகரிப்பு

 

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் மாதேஸ்வரன் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு சங்ககிரி நகர் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது ஞாயிற்றுக்கிழமை சந்தையில் கூடியிருக்கும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் திமுக தேர்தல் வாக்குறுதி பிரசுரங்களை வழங்கி ஓட்டு கேட்டார்.

அதனைத் தொடர்ந்து அவர், பெட்டிக்கடைகள் மற்றும் டீக்கடைக்கு சென்று தேநீர் அருந்தி மக்களோடு மக்களாக நின்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS