BREAKING NEWS

சங்ககிரி ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த நிலக்கரி சரக்கு ரயில் பெட்டியில் திடீர் புகை மூட்டம் தீயணைப்பு மீட்பு படையினர் தீபிடிப்பு ஏற்படாமல் தடுத்தனர்.

சங்ககிரி ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த நிலக்கரி சரக்கு ரயில் பெட்டியில் திடீர் புகை மூட்டம் தீயணைப்பு மீட்பு படையினர் தீபிடிப்பு ஏற்படாமல் தடுத்தனர்.

கேஆர்சியில் இருந்து கேரளாவிற்கு கடந்த மாதம் 26ந் தேதி சரக்கு ரயில் மூலம் நிலக்கரி கொண்டு செல்லப்பட்டது. அதில் ஒரு பெட்டி மட்டும் பழுது காரணமாக சங்ககிரி ரயில்வே ஸ்டேஷன் அருகே சிக்லைன் எனப்படும் பழுது ரயில்கள் நிறுத்தும் ட்ராக்கில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 8.45 மணிக்கு நிலக்கரி பெட்டியில் திடீரென புகைமூட்டம் காணப்பட்டது.

ரயில்வே ஊழியர்கள் 112 எண்ணிற்கு தகவல் தெரிவித்தனர். அதனையடுத்து கிடைத்த தகவலின் பேரில், சங்ககிரி தீயணைப்பு நிலைய அதிகாரி ரமேஷ் குமார் தலைமையில் மீட்பு படையினர் விரைந்து சென்று புகை மூட்டத்தை அணைக்க தொடங்கினர். முன்னதாக ரயில் பெட்டி நிறுத்தப்பட்ட டிராக் மேலே செல்லும் உயர் மின் அழுத்த மின்சாரம் தடை செய்யப்பட்டது. தொடர்ந்து ஒரு மணி நேர போராடி தீப்பிடிப்பு ஏற்படாமல் தடுத்தனர்.

அதனையடுத்து 10 மணிக்கு உயர் மின்னழுத்த மின்னோட்டம் செலுத்தப்பட்டது. பழுது வண்டிகள் நிற்கும் ட்ராக்கில் உள்ள சரக்கு வாகனத்தில் புகைமூட்டம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பயணிகள் செல்லும் ரயில்கள் வழக்கம் போல் சென்று கொண்டிருந்தன. இதனால் ரயில் போக்குவரத்து ஏதும் தடைபடவில்லை.

இது குறித்து சேலம் கோட்ட பாதுகாப்பு படை ஆணையர் சவ்ரவ் உத்தரவின் பேரில் ஈரோடு ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்து வருகின்றனர். மேலும் அதிகாரிகள் கூறிகையில், வெப்பத்தின் காரணமாக நிலக்கரியில் புகைமூட்டம் ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவித்தனர்.

CATEGORIES
TAGS