BREAKING NEWS

சங்கராபுரம் அருகே பட்டா மாற்றத்திற்கு 4,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் வி.ஏ.ஓ., சிக்கி கைது

சங்கராபுரம் அருகே பட்டா மாற்றத்திற்கு 4,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் வி.ஏ.ஓ., சிக்கி கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த பூட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னையன்( வயது 50); புத்திராம்பட்டு கிராமத்தில் உள்ள தனது வீட்டுமனைக்கு பட்டா மாற்றம் செய்து தரக்கோரி, புத்திராம்பட்டு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

அங்கு வி.ஏ.ஓ.,வாக பணிபுரியும் உலகங்காத்தான் கிராமத்தைச் சேர்ந்த கோமதி( வயது 38), பட்டா மாற்றத்திற்கு பொன்னையனிடம் 4,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

இது குறித்து, பொன்னையன் கள்ளக்குறிச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் அளித்தார்.

லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கொடுத்த ரசாயனம் தடவிய 4000 ரூபாயை, கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் பணியிலிருந்து பெண் விஏஓ கோமதியிடம் பொன்னையன் கொடுத்தார்.

அங்கு கண்காணிப்பிலிருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் சத்தியராஜ் தலைமையிலான காவல் ஆய்வாளர் அருண்ராஜ் மற்றும் போலீசார், கோமதியின் கைரேகை பதிந்த லஞ்சப் பணத்துடன் கையும், களவுமாக பிடித்து கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

Share this…

CATEGORIES
TAGS