சமத்துவ ரம்ஜான் நோன்பு விழா கொண்டாடிய கல்லூரி மாணவர்கள்
சமத்துவத்தை போற்றும் வகையில் மூன்று மத குருக்கள் கலந்து கொண்டு அசத்தல்
ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகைக்காக நோன்பு வைத்து வருகின்றனர். இந்த நிலையில் சமத்துவத்தை பேணிக்காக்கும் வகையில் மதுரவாயலில் உள்ள தனியார் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் ஜாதி, மத பேதமின்றி அனைத்து மத மாணவர்களையும் ஒன்றிணைத்து இந்து, முஸ்லிம், கிறிஸ்துவரென மூன்று மதத்தைச் சார்ந்த மத குருக்களை அழைத்து வந்து மேள, தாளங்கள் முழங்க அவர்களை ஊர்வலமாக அழைத்து வந்தனர் பின்னர் இந்து முஸ்லீம் கிறிஸ்தவர்கள் என அனைத்து மாணவர்களும் ஒன்றிணைந்து சமத்துவத்தை பேணிக் காக்கும் வகையில் ரம்ஜான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை நடத்தினார்கள் கல்லூரி வளாகத்தில் அனைத்து மாணவர்களும் ஒன்றிணைந்து இஸ்லாமிய நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது