BREAKING NEWS

சினிமா

24 வயது ’கல்லி பாய்’ பாடகர் திடீர் மரணம்: படக்குழு இரங்கல்.

24 வயது ’கல்லி பாய்’ பாடகர் திடீர் மரணம்: படக்குழு இரங்கல்

’கல்லிபாய்’ படத்தில் பாடி நடித்த, 24 வயது ராப் பாடகர் திடீரென உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரன்வீர் சிங், ஆலியா பட், சித்தாந்த் சதுர்வேதி, விஜய் ராஸ் உட்பட பலர் நடித்த இந்திப் படம் ’கல்லி பாய்’. மும்பை தாராவி பகுதி தெருக்களில் பாடும், ராப் பாடகர்களைப் பற்றிய கதையான இதை, ஸோயா அக்தர் இயக்கி இருந்தார். இந்தப் படம் வரவேற்பைப் பெற்றது.

’கல்லிபாய்’-ரன்வீர் சிங், சித்தாந்த் சதுர்வேதி, டாட் ஃபோட்

இதில், ’இண்டியா 91’ என்ற ராப் பாடலில் , தர்மேஷ் பவார் என்ற எம்சி டாட் ஃபோட், பாடி நடித்திருந்தார். இவர், மும்பை ஹிப் ஹாப் சுதேசி குழுவைச் சேர்ந்தவர். இந்நிலையில் 24 வயதான டாட் ஃபோட் திடீரென மரணமடைந்துள்ளார். அவர் எங்கு, எப்படி இறந்தார் என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை.

அவர் மறைவை அடுத்து ’கல்லிபாய்’ படத்தில் நடித்த ரன்வீர் சிங், சித்தாந்த் சதுர்வேதி, இயக்குநர் ஸோயா அக்தர் ஆகியோர் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )