சினிமா
ஒரே காரணம்தான்: விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்திற்கு குவைத்தில் தடை.
விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்திற்கு குவைத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதம் தொடர்பான காட்சிகள் இப்படத்தில் காட்டப்பட்டுள்ளதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நெல்சன் – விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘பீஸ்ட்’. வரும் 13-ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். படத்தில் இயக்குநர் செல்வராகவன், யோகிபாபு, விடிவி கணேஷ், லிலிபுட் ஃப்ரூக்கி, நடிகை அபர்ணா தாஸ், அங்கூர் அஜித் விகால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிரூத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏற்கெனவே அவர் இசையில் வெளியான இரண்டு பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ரசிகர்கள் படத்தை பார்க்க ஆர்முடன் காத்திருக்கின்றனர். இதனிடையே, இப்படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த டிரெய்லரில் விஜய் மாஸாக வரும் காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் கூட்டியிருக்கிறது.
தற்போது படத்தை வெளிநாடுகளில் வெளியிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இப்படத்திற்கு குவைத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதம் தொடர்பான காட்சிகள் இப்படத்தில் காட்டப்பட்டுள்ளதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.