BREAKING NEWS

சினிமா

தனுஷ் பட நடிகை வீட்டில் நகை, பணம் கொள்ளை!

தனுஷ் பட நடிகை வீட்டில் நகை, பணம் கொள்ளை!

பிரபல இந்தி நடிகை சோனம் கபூர். இவர் தனுஷுடன் ‘ராஞ்ஜனா’ (Raanjhanaa) என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் தமிழிலும் வெளியானது. இந்தி நடிகர் அனில் கபூரின் மகளான சோனம் கபூர், கணவர் ஆனந்த் ஆகுஜாவுடன் டெல்லியில் வசித்து வருகிறார். அமிர்தா ஷெர்கில் மார்க்கில் இவர்களின் வீடு உள்ளது.

கடந்த பிப்ரவரி 11-ம் தேதி, இவர்கள் வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளை போனது. இதன் மதிப்பு 2.4 கோடி ரூபாய். இது தொடர்பாக உடனடியாக போலீஸில் புகார் செய்யாமல், பிப்ரவரி 23-ம் தேதி புகார் செய்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கு முன்பு, சோனம் கபூரின் மாமனார் ஹரீஷ் ஆகுஜாவிடம் ஆன்லைனில் ஒரு கும்பல் 27 கோடி ரூபாய் மோசடி செய்திருந்தது. இதுபற்றி கடந்த ஜூலையில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக, 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், சோனம் கபூரின் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )