BREAKING NEWS

சினிமா

‘மாயோன்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு.

‘மாயோன்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

இளையராஜா இசையமைத்துள்ள ‘மாயோன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பில் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் படம் ‘மாயோன்’. சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்ய, இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

பார்வை திறன் இல்லாத மாற்றுத்திறனாளிகளும் முழுமையான திரைப்பட அனுபவத்தை உணரும் வகையில் உருக்கப்பட்டிருக்கும் ‘மாயோன்’ படம் ஜூன் மாதம் 17-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இளையராஜா எழுதி இசையமைத்த ‘மாயோனே…’ எனத்தொடங்கும் பாடல் ஏற்கனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. டீஸர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியான நிலையில், இப்போது படத்தின் ரிலீஸ் தேதியைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ஜூன் 17-ம் தேதி இந்தப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )