BREAKING NEWS

சினிமா

கமல்ஹாசன் நடிக்கும் ’விக்ரம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரயிலில் ஒட்டப்பட்டுள்ளது.

ரயிலில் கமலின் `விக்ரம்’ ஃபர்ஸ்ட் லுக்

விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தை அடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம், ’விக்ரம்’. கமல்ஹாசன் நடிக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், நரேன் உள்பட பலர் நடிக்கின்றனர். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப்படத்தின் டீசரும் கிளிம்ப்ஸும் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன. படம் ஜூன் 3-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. படத்தின் தமிழ்நாட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்தப் படத்தை, தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பான் இந்தியா முறையில் வெளியிட இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, இந்தப் படத்தின் புரமோஷன் வேலைகள் தொடங்கிவிட்டன. படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக ரயில்களில் இந்தப் படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஈரோட்டில் ரயில் எஞ்சின் ஒன்றில் விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒட்டப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதை தெற்கு ரயில்வே ட்விட்டரில் அறிவித்துள்ளது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )