BREAKING NEWS

சினிமா

விஜய் சேதுபதி நடிக்கும் இந்திப் படத்தில் ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

விஜய் சேதுபதி, ஸ்ரீராம் ராகவன், கேத்ரினா கைஃப்

விஜய் சேதுபதி, கேத்ரீனா கைஃப் நடிக்கும் இந்திப் படம் ’மெர்ரி கிறிஸ்துமஸ்’. இதை ஸ்ரீராம் ராகவன் இயக்கி வருகிறார். இவர், அந்தாதூன், ஏஜெ்ன்ட் வினோத், பத்லாபூர் உட்பட சில இந்திப் படங்களை இயக்கியவர். இவருடைய ‘அந்தாதுன்’ படம், தமிழில் ‘அந்தகன்’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது.

’மெர்ரி கிறிஸ்துமஸ்’ படம் கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது விஜய் சேதுபதி, ஸ்ரீராம் ராகவன் ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கேத்ரினா, ’இயக்குநர் ஸ்ரீராம் ராகவனுடன் பணிபுரிவதை நான் எப்போதும் விரும்புவேன். த்ரில்லர் கதைகளைச் சொல்வதில் அவர் மாஸ்டர். இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைவதில் மகிழ்ச்சி’ என்று கூறியிருந்தார்.

இந்தப் படத்தில் ராதிகா சரத்குமாரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவர் போலீஸ் உடையில், நடிகை கேத்ரினா கைஃபு டன் இருக்கும் புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

ராதிகா, கேத்ரினா

நடிகர் விஜய் சேதுபதி ஏற்கனவே ’மும்பைக்கர்’ என்ற இந்திப் படத்தில் நடித்து முடித்துள்ளார். இது ’மாநகரம்’ படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )