BREAKING NEWS

சினிமா

நடிகர் யாஷ் மற்றும் கே.ஜி.எஃப்: சாப்டர் 2 படக்குழுவை, நடிகர் அல்லு அர்ஜுன் பாராட்டியுள்ளார்.

`இந்திய சினிமாவை உயரத்தில் பறக்கவிட்டதற்கு நன்றி’: ராக்கி பாயை பாராட்டும் `புஷ்பராஜ்’

விஜய் கிரகந்தூர் ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ள படம் ‘கே. ஜி. எஃப்: சாப்டர் 2’. பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இந்தப் படத்தில் யாஷ், ராக்கி பாய் என்ற கேரக்டரில் மிரட்டலாக நடித்திருக்கிறார். அவரது ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ஈஸ்வரி ராவ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு ரவி பஸ்ரூர் இசை அமைத்துள்ளார். இவருடைய பின்னணி இசை பாராட்டப்பட்டு வருகிறது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளில் கடந்த 14-ம் தேதி வெளியானது. ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ள இந்தப் படத்தை திரையுலகினரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், ’புஷ்பா’ படத்தில் புஷ்பராஜ் என்ற கேரக்டரில் மிரட்டி இருந்த நடிகர் அல்லு அர்ஜுன், நடிகர் யாஷை பாராட்டியுள்ளார். இதுபற்றி ட்விட்டரில், கே.ஜி.எஃப் 2 டீமுக்கு வாழ்த்துகள். யாஷ் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சஞ்சய் தத், ரவீணா டாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி உட்பட அனைவரும் நடிப்பில் ஈர்க்கிறார்கள்.

பின்னணி இசையும் ஒளிப்பதிவும் அருமை. படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் வாழ்த்துகள். இயக்குநர் பிரசாந்த் நீல், சிறப்பாக படமாக்கி இருக்கிறார். சிறந்த சினிமா அனுபவத்தைத் தந்ததற்காகவும் இந்திய சினிமா கொடியை உயரத்தில் பறக்க விட்டதற்காகவும் நன்றி ’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )