BREAKING NEWS

சினிமா

’ஆச்சார்யா’ படத்தில் நடிகை காஜல் அகர்வால் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டது உண்மைதான்” என்று அந்தப் படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

`ஆச்சார்யா’ படத்தில் இருந்து காஜல் காட்சிகள் திடீர் நீக்கம்: இயக்குநர் சொல்வது ஒரே காரணம்தான்

சிரஞ்சீவி நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள தெலுங்கு படம், ’ஆச்சார்யா’. கொரட்டலா சிவா இயக்கியுள்ள இந்தப் படத்தில் ராம் சரண் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். பூஜா ஹெக்டே, சோனு சூட், கிஷோர் உட்பட பலர் நடித்துள்ளனர். திரு ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு மணிசர்மா இசை அமைத்துள்ளார்.

இந்தப் படத்தில், சிரஞ்சீவி ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். இந்நிலையில் அவர் நடித்த காட்சிகளை இந்தப் படத்தில் இருந்து திடீரென நீக்கியுள்ளனர். இதுபற்றி கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியான நிலையில், அதுபற்றி படக்குழு ஏதும் தெரிவிக்கவில்லை.

இயக்குநர் கொரட்டலா சிவா

இந்நிலையில், இயக்குநர் கொரட்டலா சிவா அது உண்மைதான் என்று தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, “காஜல் அகர்வாலை ஜாலியான கேரக்டரில் இதில் நடிக்க வைத்தோம். அவர் தொடர்பான காட்சிகளை படமாக்கிவிட்டோம். முதல் ஷெட்யூல் முடிந்ததும் ரஷ் பார்த்தபோது ஒரு முன்னணி நடிகையை, சின்ன கேரக்டரில் நடிக்க வைப்பது சரியல்ல என்று தோன்றியது. இதுபற்றி காஜல் அகர்வாலிடமும் பேசினோம். அவர் பாசிட்டிவாக எடுத்துக்கொண்டார். பிறகு அவர் தொடர்பான காட்சிகளை நீக்கிவிட்டோம். ஆனாலும் ஒரு பாடல் காட்சியில் அவர் வருவார்” என்றார்.

இந்தப் படம் வரும் 29-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )