சினிமா
சுனேனா நடிக்கும் ’ரெஜினா’ படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது.
நீர்ப்பறவை, சில்லுக் கருப்பட்டி உட்பட பல படங்களில் நடித்தவர் சுனேனா. இவர் இப்போது ’ரெஜினா’ என்ற படத்தில் நடிக்கிறார். எல்லோ பியர் புரொடக்ஷன் சார்பில் கோயம்புத்தூரை சேர்ந்த சதீஷ் நாயர் தயாரிக்கிறார். இதன் இசை அமைப்பாளரும் இவர்தான். படத்தை இயக்கி தமிழுக்கு அறிமுகமாகிறார், டோமின் டி சில்வா. இவர், மலையாளத்தில் பரபரப்பாக பேசப்பட்ட “பைப்பின் சுவத்திலே பிராணயம்” மற்றும் “ஸ்டார்” படங்களை இயக்கியவர்.
’’கணவனை கொன்றவர்களை பழிவாங்கும் பெண்ணாக சுனேனா நடித்துள்ளார். சாதாரண இல்லத்தரசியாக இருக்கும் பெண், அசாதாரணமான விஷயங்களைச் சாதிப்பதைப் பற்றியும் அனைவரையும் ஈர்க்கும் த்ரில்லர் படமாகவும் இது இருக்கும். ஒவ்வொரு காட்சியும் சீட்டின் நுனியில் அமர வைப்பது போன்ற திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது’’ என்று, படம் பற்றி சதீஷ் நாயர் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.
CATEGORIES Uncategorized
