BREAKING NEWS

சினிமா

ஏ.ஆர்.ரகுமான் இசையில் திரைப்படமாகும் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை வரலாறு – இயக்கப்போவது யார் தெரியுமா?

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கையை மையமாக வைத்தும் திரைப்படம் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.

விளையாட்டு நட்சத்திரங்கள், அரசியல் பிரபலங்கள் ஆகியோரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் பயோபிக் படங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

தமிழில் இதுவரை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து குயின் என்ற வெப் தொடரும், தலைவி என்கிற படமும் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கையை மையமாக வைத்தும் திரைப்படம் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.

முன்னாள் முதல்வர் கலைஞரின் மகனாக இருந்தாலும், அரசியலில் படிப்படியாக முன்னேறி முதல்வர் ஆனவர் ஸ்டாலின். இந்த நிலைக்கு வர அவர் பல்வேறு போராட்டங்களையும் சந்தித்துள்ளனர். அவர் மிசாவில் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்ததில் இருந்து தற்போது முதல்வர் ஆனது வரையிலான காலகட்டத்தில் அவர் வாழ்வில் நடந்த சில சம்பவங்களை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்படுகிறதாம்.

இப்படத்தை பிரபல நடிகரும், கன்னி மாடம் படத்தின் இயக்குனருமான போஸ் வெங்கட் தான் இயக்க உள்ளாராம். மேலும் இதில் மு.க.ஸ்டாலினாக நடிக்க சமுத்திரக்கனி ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )