BREAKING NEWS

சினிமா

நடிகர் ஆதி, நடிகை நிக்கி கல்ராணி திருமண தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது.

‘மிருகம்’, ‘ஈரம்’, ‘அரவான்’, ‘வல்லினம்’, ‘யாகாவாராயினும் நாகாக்க’, ‘மரகதநாணயம்’ உட்பட பல படங்களில் நடித்தவர் ஆதி. இவர் நடித்து சமீபத்தில் வெளியான, ’கிளாப்’ படம், தமிழ், தெலுங்கில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. நடிகர் ஆதியும் நடிகை நிக்கி கல்ராணியும் ’யாகாவாராயினும் நாகாக்க’ என்ற படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இதுபற்றிய செய்தி கசிந்தபோதும் இருவரும் வெளிப்படையாகச் சொல்லவில்லை.

சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ஆதி கூறும்போது, “விரைவில் என் காதல் திருமணம் இருக்கும். தேதி முடிவானதும் நானே அறிவிப்பேன்” என்று கூறியிருந்தார். இந்நிலையில், இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் மார்ச் 24-ம் தேதி நடந்தது. இதில் இரு குடும்பத்தைச் சேர்ந்த நெருங்கிய சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

இவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இந்நிலையில், இவர்கள் திருமண தேதி இப்போது தெரியவந்துள்ளது. இவர்கள் திருமணம் வரும் 18-ம் தேதி சென்னையில் நடக்க இருக்கிறது. இதில் நிக்கி கல்ராணி, ஆதியின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்ள இருக்கின்றனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )