BREAKING NEWS

சினிமா

கமலின் `விக்ரம்’ படத்தில் சூர்யா: வைரலாகும் வீடியோ காட்சி!

கமலின் `விக்ரம்’ படத்தில் சூர்யா: வைரலாகும் வீடியோ காட்சி!

கமல்ஹாசனின் ’விக்ரம்’ படத்தில் நடிகர் சூர்யாவும் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் ‘விக்ரம்’. இதில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தை கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படம் ஜூன் 3-ம் தேதி வெளியாக உள்ளது. விக்ரம் திரைப் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, வரும் 15-ம் தேதி சென்னையில் நடக்கிறது. இந்தப் படத்தில் கமல்ஹாசன் பாடிய ’பத்தல பத்தல’ என்ற பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் நடிகர் சூர்யா இந்தப் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். நடிகர் அமிதாப் பச்சன் நடிக்க இருந்த கேரக்டரில் சூர்யா நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. கையில் விலங்குடன் சூர்யா நடந்து வரும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இந்தக் காட்சிகள் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது.

நடிகர் சூர்யா, கமல்ஹாசனின் மன்மதன் அம்பு படத்திலும் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.

 

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

 

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )