BREAKING NEWS

சினிமா

அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்?

அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்?

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல இருப்பதாகக் கூறப்படுகிறது.

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த, ‘அண்ணாத்த’ கடந்த நவம்பர் மாதம் 4-ம் தேதி வெளியானது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்திருந்தது. ரஜினியின் அடுத்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. ரஜினிகாந்தின் 169-வது படமான இதை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். படத்துக்கான முன் தயாரிப்பு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

ஆகஸ்ட் மாதம் ஷூட்டிங் தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா செல்ல இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் வருடாந்திர உடல் பரிசோதனைக்காக அங்கு செல்கிறார் என்றும் இரண்டு வாரங்கள் ஓய்வு எடுத்துவிட்டு பிறகு சென்னைத் திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.

அதற்குப் பிறகு நெல்சன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று தெரிகிறது.

 

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )