சினிமா
‘எப்போது திருமணம்?’ – நடிகர் ஆதி விளக்கம்.
‘மிருகம்’, ‘ஈரம்’, ‘அரவான்’, ‘வல்லினம்’, ‘யாகாவாராயினும் நாகாக்க’, ‘மரகதநாணயம்’ உட்பட பல படங்களில் நடித்தவர் ஆதி. இவர் நடித்து சமீபத்தில் வெளியான படம், ’கிளாப்’. தமிழ், தெலுங்கில் வெளியான இந்தப் படம் வரவேற்பைப் பெற்றுள்ளது. நடிகை நிக்கி கல்ராணியும் நடிகர் ஆதியும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுபற்றி அவர் கூறியதாவது:
‘கிளாப்’ படம் வரவேற்பைப் பெற்றிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அடுத்து, லிங்குசாமி இயக்கும் ’வாரியர்’ படத்தில் வில்லனாக நடித்து வருகிறேன். சவாலான கதைகளை நிதானமாகத் தேர்ந்தெடுக்கிறேன். எனக்கு மொழி ஒரு தடை அல்ல. மொழியைச் சார்ந்து கதாபாத்திரத்தைத் தேர்வு செய்ய மாட்டேன்.
எனக்கேற்ற வசதியான கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடித்தால், வெறும் போலீஸ் கதாபாத்திரத்தில் தான் நடித்துக்கொண்டிருப்பேன். அது சலிப்படையச் செய்யும். அப்படி ஆகாமல் இருக்க, எனக்கு நானே சவால் விடும் பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். அடுத்து விரைவில் வெளியாகவிருக்கும் படம் ’பார்ட்னர்’ ஒரு நகைச்சுவை திரைப்படம். இதில் ஹன்சிகா, யோகிபாபு, ரோபோ சங்கர், இன்னும் நிறைய பல காமெடி நடிகர்கள் நடிக்கிறார்கள்.
கரோனா நேரத்தில் மக்கள் பல விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். நிறைய படங்கள் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததால் அவர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இன்று இருக்கிறது.
எனது திருமணம் பற்றி கேட்கிறார்கள். விரைவில் அறிவிப்பு வரும். காதல் மற்றும் குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் நடக்கும். முறையாக விரைவில் அறிவிப்பேன்.
இவ்வாறு நடிகர் ஆதி கூறினார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.