BREAKING NEWS

சினிமா

’ஜென்டில்மேன் 2’ படத்தில் நயன்தாரா?

’ஜென்டில்மேன் 2’ படத்தில் நயன்தாரா?

கே.டி.குஞ்சுமோன் தயாரிக்கும் ’ஜென்டில்மேன் 2’ படத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழில், ‘வசந்தகால பறவை’, ‘சூரியன்’, ‘ஜென்டில்மேன்’, ‘காதலன்’, ‘காதல் தேசம்’, ‘ரட்சகன்’ உட்பட பல படங்களைத் தயாரித்தவர், கே.டி.குஞ்சுமோன். கடைசியாக, 1999-ம் ஆண்டு ’என்றென்றும் காதல்’ என்ற படத்தைத் தயாரித்தார். பிறகு படத் தயாரிப்பில் ஈடுபடவில்லை. அவர் திரைப்படத் தயாரிப்பில் இப்போது மீண்டும் இறங்கியுள்ளார்.

’ஜென்டில்மேன் 2’ படத்தை அவர் தொடங்கி இருக்கிறார். இதன் இயக்குநர், நடிகர், தொழில்நுட்ப குழுவினர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ‘பாகுபலி’ புகழ் மரகதமணி இசை அமைக்கிறார்.

இந்நிலையில் இந்தப் படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. காத்துவாக்குல ரெண்டு காதல், சிரஞ்சீவியின் காட்ஃபாதர் படங்களில் நடித்துள்ள நயன்தாரா, அடுத்து அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து ஜென்டில்மேன் 2 படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )