சினிமா
விஜய்யின் ’பீஸ்ட்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.

விஜய் நடித்துள்ள `பீஸ்ட்’ படத்தின் ரிலீஸ் தேதியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்துள்ள படம், ’பீஸ்ட்’. இதில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். யோகி பாபு, செல்வராகவன், ஷைன் டாம் ஜாக்கோ, ஜான் விஜய், அபர்னா தாஸ், ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் ’அரபிக் குத்து’ பாடல் பலத்த வரவேற்பைப் பெற்றது. விரைவாக 10 கோடி பார்வைகளை பெற்று சாதனைப் படைத்தது. அடுத்து விஜய் பாடிய, ’ஜாலியோ ஜிம்கானா’ பாடலும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தப் படம் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி, இந்தப் படம் ஏப்ரல் 13-ம் தேதி வெளியாக இருக்கிறது.
இதையடுத்து விஜய் ரசிகர்கள் #Thalapathy என்ற ஹேஷ்டேக்கை சமூக வலைதளங்களில் டிரெண்டாக்கி வருகின்றனர்.
ஏப்ரல் 14-ம் தேதி யாஷ், ஸ்ரீனிதி ஷெட்டி, சஞ்சய் தத் நடித்துள்ள கே.ஜி.எஃப் சாப்டர் 2 படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
