சிவாஜி குடும்பத்திலிருந்து இன்னொரு நடிகர்!
சிவாஜி குடும்பத்திலிருந்து இன்னொரு நடிகர்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் பிரபுவும் ராம்குமாரும் திரைப்படங்களில் நடித்து வருகின்றனர். பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவும் ஹீரோவாக நடித்து வருகிறார். ராம்குமார் மகன் துஷ்யந்த் தயாரிப்பளராகவும், நடிகராகவும் இயங்கி வருகிறார். இந்நிலையில் ராம்குமாரின் மற்றொரு மகன் தர்சன் கணேசனும் சினிமாவில் நடிக்க வருகிறார்.
புணே நகரில் நடிப்புப் பயிற்சி பெற்றுள்ள தர்சன் கணேசன், தமிழ், இந்தி, ஆங்கில மொழிகளில் தெருக் கூத்து நாடகங்களில் பங்கேற்றுள்ளார். இவர் ஹீரோவாக நடிக்கவிருக்கும் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES Uncategorized
TAGS சினிமா
