BREAKING NEWS

சுதந்திர தினத்தை முன்னிட்டு விருத்தாசலம் அருள்மிகு ஸ்ரீ விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது

சுதந்திர தினத்தை முன்னிட்டு விருத்தாசலம் அருள்மிகு ஸ்ரீ விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அமைந்துள்ள பாடல்பெற்ற தலமான அருள்மிகு ஸ்ரீ விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில், நாட்டின் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலையத்துறை சார்பில், இணை ஆணையர் பரணிதரன் வழிகாட்டுதலின்படி, ஆலய செயல்அலுவலர் மாலா தலைமையில் சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் நகரமன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தினர். மேலும் 300 க்கு மேற்ப்பட்ட பொதுமக்கள் சமபந்தியில் கலந்து கொண்டு உணவு அருந்தினர். சமபந்தி விருந்து நிகழ்ச்சி ஆலய நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு மேலாளர் பார்த்தசாரதி மற்றும் ஆலய ஊழியர்கள் விருந்தில் கலந்து கொண்ட பொது மக்களுக்கு உணவு பரிமாறினர்.

CATEGORIES
TAGS