செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வருவதை முன்னிட்டு சிலை தயாரிக்கும் பணியில் தீவிரம் காட்டும் தொழிலாளர்கள்
செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வருவதை முன்னிட்டு பண்ருட்டி பகுதியில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் தீவிரம் காட்டும் தொழிலாளர்கள் !
இந்துக்களின் பண்டிகைகளின் முக்கியபண்டிகையான விநாயகர் சதுர்த்தி பண்டிகை உலகமெங்கும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன இந்த நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த வையாபுரிபட்டினம், எஸ் எரிப்பாளையம், சேமக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இன்னும் குறைந்த நாட்களில் உள்ள நிலையில் சிலை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றன இதில் சுமார் இரண்டு அடி முதல் 10 அடி வரை சிலைதயாரித்து வருகின்றன,
இதில் இரசாயனம் மில்லாமல் அரசு அறிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு வாட்டர் பெயிண்ட், கிழங்கு மாவு, கருங்கல் மாவு பேப்பர் பவுடர் உள்ளிட்ட பொருட்களை கலந்து சுகாதார முறையில் சிலைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.