சேலம் மாவட்டம் ஓமலூர் அரசு நிதி உதவி பெறும் பாத்திமா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவிகள் சாதனை.
சேலம் மாவட்டம் ஓமலூர் அரசு நிதி உதவி பெறும் பாத்திமா மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று தமிழக அரசின் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில். பள்ளியில் தேர்வு எழுதிய மாணவிகள் மொத்தமாக 98 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.
இதில்,பத்தாம் வகுப்பு மாணவி ஷிபா 500க்கு 491 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தை பெற்றார்.
மேலும் நிரஞ்சனா தேவி மற்றும் சாஜிரா பேகம் ஆகிய இரு மாணவிகள் 485 பெற்று இரண்டாம் இடமும், மாணவி துர்கா 484 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பிடித்தனர்.
குறிப்பாக,கணிதப் பாடத்தில் 4 மாணவிகள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்று அசத்தினர்.
மேலும் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு கேக் ஊட்டி விட்டு பள்ளியின் தலைமை ஆசிரியை அருட்சகோதரி ரீட்டா மேரி பாராட்டினார்.
பேட்டி : 491 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் இடம் பெற்ற மாணவி ஷிபா
தான் பள்ளியில் முதல் மதிப்பெண்கள் எடுப்பதற்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்கள் தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் ஆகியோர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட அவர் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுவேன் என மகிழ்ச்சியோடு கூறினார்.