டெல்டா விவசாயிகளை திமுக அரசு திட்டமிட்டு வஞ்சிக்கிறது என்று தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பிஆர் பாண்டியன் குற்றச்சாட்டு.

தஞ்சாவூர்,
தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர் பாண்டியன் தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் குறுவை அறுவடை நெல் இழப்பிற்கு ரூ 35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும், 22 சதவீதம் ஈரப்பதம் நெல் கொள்முதல் செய்ய வேண்டும், நெல் குவிண்டாலுக்கு ஒன்றுக்கு ரூ 2500 வழங்க வேண்டும், கரும்பு டன் ஒன்றிற்கு ரூ 4000 வழங்க வேண்டும்,
கூட்டுறவு கடன் சங்கங்களில் விலை நிலங்களின் அடிப்படையில் கடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
CATEGORIES தஞ்சாவூர்