BREAKING NEWS

தஞ்சை சட்டமன்ற தொகுதி தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை தஞ்சையில் நேற்று நடைபெற்றது.

தஞ்சை சட்டமன்ற தொகுதி தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை தஞ்சையில் நேற்று நடைபெற்றது.

தஞ்சை சட்டமன்ற தொகுதி தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை தஞ்சையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

முன்னாள் அமைச்சர் உபயதுல்லா, டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சை மத்திய மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் சண்.ராமநாதன் வரவேற்றார்.

இதில் மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன், தி.மு.க. அயலக அணி செயலாளர் அப்துல்லா எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் மாவட்ட நிர்வாகிகள் காரல்மார்க்ஸ், ஜித்து, ஒன்றிய செயலாளர்கள் அருளானந்தசாமி, செல்வகுமார், பேரூர் பொறுப்பாளர் கல்யாணசுந்தரம் மற்றும் நகர நிர்வாகிகள் இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் தஞ்சை நகர இளைஞரணி அமைப்பாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )