தஞ்சை மாவட்டம் ஒக்காநாடு கீழையூர் அருள்மிகு செல்லியம்மன் கோவில் சித்திரை அச்சு திருத்தேர் வெள்ளோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
தஞ்சை மாவட்டம் ஒக்காநாடு கீழையூர் அருள்மிகு செல்லியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை ஒட்டி பல ஆண்டுகளுக்கு பிறகு அச்சு திருத்தேர் வெள்ளோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் தேசத்தலைவர்கள், விடுதலைப் போராட்ட வீரர்கள், ஆகியோருடன் சுவாமி சிலைகளும் பொறிக்கப்பட்ட தேரினை கிராம மக்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர்.தஞ்சை மாவட்டம் ஒக்கநாடு கீழையூரில் அருள்மிகு.
செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது.சித்திரை திருவிழாவை ஒட்டி அச்சு திருத்தேர் வெள்ளோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.வழக்கமாக தூக்கு தேரில் சுவாமி வலம் வந்த நிலையில், முதல் முறையாக ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில மரத்தால் ஆன அச்சுத் தேர் வடிவமைக்கப்பட்டு இன்று வெள்ளோட்டம் நடைப்பெற்றது.திருத்தேரில், பகத்சிங், திருவள்ளுவர், விவேகானந்தர், பாரதி, நேதாஜி, சிவனை, பார்வதி முருகன், விநாயகர் என தேசத்தலைவர்கள், விடுதலைப் போராட்ட வீரர்கள். சுவாமி சிலைகள் பொறிக்கப்பட்டுள்ளன.திருத்தேர் வெள்ளோட்டத்தை கிராமமக்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர்.