BREAKING NEWS

தஞ்சையில் நடந்து சென்ற பெண்ணின் கழுத்திலிருந்த 10 பவுன் தாலிச்செயினை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தஞ்சையில் நடந்து சென்ற பெண்ணின் கழுத்திலிருந்த 10 பவுன் தாலிச்செயினை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே மேலஉளூரை சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மனைவி மங்களநாயகி (51). இவர் நேற்று முன்தினம் இரவு தஞ்சையில் உள்ள ஒரு பல் மருத்துவமனைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

வ.உ.சி. நகரில் சென்றபோது பின்னால் பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் திடீரென மங்களநாயகி கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்க செயினை பறித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த மங்களநாயகி கூச்சலிட்டார். இருப்பினும் அந்த மர்ம நபர்கள் தாலிச்செயினுடன் பைக்கில் தப்பிச் சென்று விட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் தஞ்சை தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )