தந்தை படித்த அரசு பள்ளியில் பயிலும் தாய் தந்தையை இழந்த 49 மாணவ மாணவிகளுக்கு, அமெரிக்காவில் படித்துக் கொண்டே வேலை பார்த்து கிடைத்த பணத்தை பகிர்ந்து அளித்து தந்தைக்கு பிறந்தநாள் பரிசளித்த அமெரிக்க மாணவன் :-
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சேர்ந்த இமயவரம்பன் என்பவரது மகள் இமயவதி திருமணம் ஆகி அவரது கணவர் பாரியுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். பாரி மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 89 ஆம் ஆண்டு படித்தவர் தற்பொழுது அமெரிக்க கம்பெனியில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு அஸ்வின் அஸ்வத் என்று இரு மகன்கள் உள்ளனர் இளைய மகன் அஸ்வத் தற்போது அமெரிக்காவில் 12 ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு கல்லூரியில் சேர்ந்துள்ளார் இவர் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுதிலிருந்து படித்துக் கொண்டே பகுதி நேர வேலை பார்த்து சிறுக சிறுக பணம் சேர்த்து வந்தார். தற்போது இவரது தந்தைக்கு நவம்பர் மாதம் 50-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு தந்தைக்கு வித்தியாசமாக ஏதாவது பரிசளிக்க வேண்டும் என்று நினைத்தார் இவரது தந்தை பாரி பிறந்த நாளை கொண்டாடுவதில்லை இந்நிலையில் இவர் தந்தை படித்த அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்று முடிவெடுத்தார்.
பள்ளியில் கணக்கெடுத்த பொழுது தாய் மற்றும் தந்தையரை இழந்த குழந்தைகள் 49 பேர் படித்து வருவது தெரியவந்தது இவர்கள் அனைவருக்கும் 3000 ரூபாய் வீதம் சுமார் ஒரு லட்சத்து 45 ஆயிரம் ரூபாயை பிரித்து கொடுத்துள்ளார். மேலும் பள்ளியில் படிக்கும் 350 மாணவ மாணவிகளுக்கும் புத்தகப் பையையும் வழங்கியுள்ளார்.
அது மட்டும் இன்றி பள்ளிக்கு 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒலிபெருக்கியும் வழங்கினார் இன்று பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதற்காக அமெரிக்காவிலிருந்து தனது தாயுடன் வருகை புரிந்து நேரில் வழங்கி தனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டார் தந்தைக்காக மகன் அளித்த வித்தியாசமான பிறந்தநாள் பரிசு அனைவரிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.