தனியார் பயோடெக் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஊதியம் வழங்கப்படாததையும், நிர்வாகத்தை திறக்க வலியுறுத்தியும் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உதகை அருகே உள்ள தனியார் பயோடெக் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஊதியம் வழங்கப்படாததையும், நிர்வாகத்தை திறக்க வலியுறுத்தியும் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் ஊழியர்களை காவல் துறையினர் கைது செய்தனர்…
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தனியார் பயோடெக் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த 2024 பிப்ரவரி மாதம் முதல் ஊதியம் வழங்காததை கண்டித்தும், நிர்வாகத்தை திறக்க பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தொழிற்சாலை ஊழியர்கள் குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சி ஐ டி யுயினர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் உதகை கோட்டாட்சியர் மகாராஜன் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் ஊழியர்கள் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை கைது செய்தனர். இதனால் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த இரண்டு மாதத்திற்கு மேலாக நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் இருந்த நிலையில் இன்று முதல் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.