தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்தில் காணொளி காட்சி வாயிலாக பள்ளி கல்வித்துறை சார்பில் பல்வேறு பள்ளி கட்டடங்களை திறந்து வைப்பது தொடர்ந்து…
நீலகிரி மாவட்டம் மசினகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 3.52 கோடி மதிப்பில் தரம் உயர்த்தப்பட்ட கூடுதல் கட்டிடங்களை
சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா ஆகியோர் குத்துவிளக்கேற்றி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி ( நான்கு வகுப்பறைகள், அறிவியல் கட்டடம் மற்றும் ஆண்கள் கழிவறை கட்டிடம் )
ஆகியவற்றை மாணவ மாணவிகள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அருணா, சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் ஆகியோர் மாணவ மாணவர்களின் குறைபாடுகளை கேட்டு அறிந்து கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர்.
மேலும் டிரஸ்ட் தேர்வில் மாவட்டத்தில் இரண்டாவது இடம் பிடித்த ஒன்பதாம் வகுப்பு மாணவி
இளமதி, தேர்வில் வெற்றி பெற்ற மாணவன்
குருதேவ் பிரசாத் ஆகியோருக்கு ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினர்.