தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று அகில இந்திய முத்தரையர் கூட்டமைப்பு, தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அகில இந்திய முத்தரையர் கூட்டமைப்பு தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில், பேராவூரணி தில்லங்காடு முத்தரையர் சமூக மக்களுக்கும் தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கும் மோதலை ஏற்படுத்தி புனையப்பட்ட பொய் புகாரை திரும்ப பெறவும் இதற்கு துணை போகும் அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் நிறுவன தலைவர் புதுக்கோட்டை கருப்பு முத்தரையர், தமிழக முத்தரையர் முன்னேற்ற சங்கம் மாநில செயலாளர் மோகன், முத்தரையர் வாழ்வாதார இயக்கம் தலைவர் தனலட்சுமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அகில இந்திய முத்தரையர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது