BREAKING NEWS

தரங்கம்பாடி அருகே திருக்களாச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீமத் சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா மற்றும் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

தரங்கம்பாடி அருகே திருக்களாச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீமத் சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா மற்றும் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

தரங்கம்பாடி அருகே திருக்களாச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீமத் சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா மற்றும் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்களாச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீமத் சீதளா தேவி மாரியம்மன் கோவில் வைகாசி பிற்மோற்சவ தீமிதி திருவிழா மற்றும் தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. வைகாசி பிற்மோற்சவ திருவிழா கடந்த மாதம் 26ஆம் தேதி புஷ்பா அபிஷேகத்துடன் தொடங்கிய. அதனைத் தொடர்ந்து இன்று தீமிதி மற்றும் தேரோட்டம் நடைபெற்றது.

தீமிதி திருவிழாவை முன்னிட்டு கோவில் அருகே அமைக்கப்பட்ட தீக்குண்டம் எதிரில் அம்மன் எழுந்தருளி காட்சியளிக்க குளக்கரையில் இருந்து சக்தி கரகம் புறப்பட்டு மேல வாத்தியங்கள் முழங்க விரதமர்ந்த ஏராளமான பக்தர்கள் மஞ்சள் உடை உடுத்தியும் காவடி ஏந்தியும் 16அடி அழகு காவடி குத்தியும் ஊர்வலமாக வந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பின்னர் அலங்கரிக்கப்பட்ட அம்மன் தேரில் எழுந்தருளி காட்சி அளிக்க தேர் வீதி உலாவும் நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேலும் வைகாசி பிற்மோற்சவத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

CATEGORIES
TAGS