BREAKING NEWS

தரங்கம்பாடி அருகே பத்மாவதி சமேத வெங்கடாஜலபதி திருக்கோயிலில் மஹா ஸம்ப்ரோஷண பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது .

தரங்கம்பாடி அருகே பத்மாவதி சமேத வெங்கடாஜலபதி திருக்கோயிலில் மஹா ஸம்ப்ரோஷண பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது .

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா காட்டுச்சேரி கிராமத்தில் ஸ்ரீ பத்மாவதி சமேத வெங்கடாஜலபதி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு மஹா ஸம்ப்ரோஷண பெருவிழா இன்று விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு பகவத் அனுக்ஞை மற்றும் வாஸ்து சாந்தி பூஜைகளுடன் விழா துவங்கியது.

மேலும் இரண்டு கால யாகசாலை பூஜைகள் நிறைவுற்று பூர்ணாகுதி நடைபெற்றது. பின்னர் மேள வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பாடாகி ஊர்வலமாக ஆலயத்தை சுற்றி வந்து கோபுர கலசத்தை வந்தடைந்தது. பின்னர் கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மஹா சம்ப்ரோஷண பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் கைலை சிவசேனை அனந்த பத்மநாப செட்டியார் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தார்.

Share this…

CATEGORIES
TAGS