தருமபுரம் ஞானாம்பிகை யானை வயல்வெளியில் பம்பு செட் தண்ணீரில் உருண்டு புரண்டு ஆனந்த குளியலிடும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரல்
ஆச்சாள்புரத்தில் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க வந்த தருமபுரம் ஞானாம்பிகை யானை வயல்வெளியில் பம்பு செட் தண்ணீரில் உருண்டு புரண்டு ஆனந்த குளியலிடும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரல் :-
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆச்சாள்புரம் கிராமத்தில் திருஞானசம்பந்தர் இறைவனுடன் ஐக்கியமான உலக புகழ் பெற்ற சிவலோக தியாகராஜ சுவாமி ஆலயமா அமைந்துள்ளது இந்த ஆலயத்தில் வருகிற 23ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு தர்மபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் கடந்த 11ஆம் தேதி தருமபுர மடத்திலிருந்து சொக்கநாத பெருமானை எழுந்தருள செய்து யானை குதிரை அடியார்கள் படை சூழ பாதையாத்திரை ஆச்சாள்புரம் சென்றடைந்தார் பாத யாத்திரையின் போது தருமபுர ஆதீன மரத்தில் உள்ள ஞானாம்பிகை யானையும் பாதயாத்திரையில் கலந்து கொண்டு ஆச்சார்புரத்தில் தங்கியுள்ளது. இன்று ஞானாம்பிக யானை ஆச்சாள்புரத்தில் வயல்வெளியில் உள்ள ஒரு பம்பு செட்டில் தண்ணீரில் உருண்டு புரண்டு ஆசை தீர ஆனந்த குளியல் செய்தது இதனை அருகில் இருந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்தனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது