தலைப்பு செய்திகள்
கிருஷ்ணகிரியில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நீர்நிலைகளில் இருந்த ஆக்கிரமிப்புகளில் கட்டப்பட்டு இருந்த வீடுகள், கடைகளை
பலத்த போலிஸ் பாதுகாப்புகளுடன் பொதுப்பணித்துறையினர் பெக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றியதால் பரப்பரப்பு ஏற்பட்டது.
கடந்த 2016ம் ஆண்டு சென்னை பெரும் வெள்ளம் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழகத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவு படி பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அவதானப்பட்டி என்னும் இடத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்த ஏரி உள்ள 44.88 எக்டேர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியின் நீர்தேக்கப்பகுதியில் 6 எக்டேர் அதாவது 75 சென்ட் நிலத்தை ஏரியின் கரையோரம் உள்ள 54 குடும்பத்தினர் ஆக்கிரமிப்பு செய்து அந்த இடத்தில் வீடு, கடைகள்,மாட்டு கொட்டகை, மற்றும் நெல் பயிர் போன்றவை சாகுபடி செய்து வந்தனர்.
இதனையடுத்து ஆக்கிரமிப்பு செய்த இடத்தை காலி செய்ய வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் பலமுறை நோட்டீஸ் வழங்கியதாக கூறுப்படுகிறது. ஆனால் இடத்தை காலி செய்யாத நிலையில் இன்று ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுப்பட்டனர்.
கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் சதீஸ்குமார், பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் குமார் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட அலுவலர்கள், காவலர்கள், ஆகியோர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டனர். வீடுகள்,வணிக கடைகள், மற்றும் சாகுபடி செய்யப்பட்ட நெல் பயிர்கள் போன்றவற்றை மூன்று ஜே.சி.பி. வாகனங்கள் மூலமாக இடித்தும் நெல் பயிர்களை அகற்றினர்.
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களை மீட்டனர். இதேபோல் 10க்கும் மேற்பட்ட இடங்களில் ஏரியின் நீர்தேக்க பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் படிப்படியாக அகற்றப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.