BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பாராட்டி பரிசுகள் வழங்கினார்.

திருச்செந்தூர் ஆதித்தனார் உடற்கல்வி கல்லூரியில் இம்மாதம் 12 மற்றும் 13 ஆகிய 2 நாள்கள் தேசிய அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது. இதில் கோவில்பட்டி அஸ்வா தற்காப்பு பயிற்சிப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பல்வேறு எடை மற்றும் வயது பிரிவுகளில் சிலம்பச் சண்டை, சிலம்ப தனித்திறன் போட்டிகளில் பங்கேற்றனர். இதில் சந்தீப், ரூபிகா, அருண்குமார், பாலதர்ஷன், ஹரிகிருஷ்ணன், அஸ்வின், பாலு, சிவானி, சித்தார்த் ஆகியோர் தனித்திறன் மற்றும் சிலம்பச் சண்டை போட்டிகளில் சிறப்பிடம் பெற்றனர்.


போட்டியில் வெற்றி மாணவர், மாணவிகள் மற்றும் பயிற்சியாளர் காசிமாரியப்பன் ஆகியோரை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற அலுவலத்தில் வைத்து முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டி பரிசுகளை வழங்கினார்.

இதில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன்,அதிமுக நகரச் செயலர் விஜயபாண்டியன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி,நகர்மன்ற உறுப்பினர்கள் செண்பகமூர்த்தி, கவியரசன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி, அதிமுக நிர்வாகிகள் கோபி, முருகன், கார்த்திக், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )