தலைப்பு செய்திகள்
வீரபாண்டி:அடையாளம் தெரியாத எரிந்த நிலையில் இடுப்பு வரையுள்ள பெண் பிரேதம்.
தேனி மாவட்டம், வீரபாண்டி பாலத்திற்கு கிழக்கே உள்ள முல்லை ஆற்றில்
அடையாளம் தெரியாத பெண் பிரேதம் பாதி எரிந்த நிலையில் மிதந்தது.
சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் மற்றும் அடையாளம் தெரியாமல் எரிந்த நிலையில் இடுப்பு வரையுள்ள பெண் பிரேதம் இறந்து கிடப்பதாக பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலையடுத்து விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த
வீரபாண்டி காவல்துறை பிரேதத்தை கைப்பற்றி தேனி கானா விலக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்

