BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

அசனி புயல் அபாயம்: அந்தமான் செல்லும் 5 விமானங்கள் ரத்து!

அசனி புயல் அபாயம்: அந்தமான் செல்லும் 5  விமானங்கள்  ரத்து!

ஆசானி புயல் அபாயம் காரணமாக சென்னை விமான நிலையத்திலிருந்து அந்தமான் செல்ல வேண்டிய 5 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

அந்தமான், நிக்கோபார் தீவுகளின் அருகே வங்கக் கடலில் தென் கிழக்குப் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகியுள்ளது. அது புயலாக உருவாகி அந்தமான், நிக்கோபார் பகுதிகளைத் தாக்கும் ஆபத்து உள்ளது. அசனி  என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் புயல் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, அந்தமான், நிக்கோபார் பகுதிகளில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களும் நேற்று முதல் மார்ச் 22-ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகள் இந்த நாட்களில் வர வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து அந்தமான் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் பலா் தங்களுடைய பயணத் தேதிகளை மாற்றி அமைத்தனா். இதையடுத்து அந்தமானுக்குச் செல்லும் பயணிகள் எண்ணிக்கை குறைந்தது. இதன் காரணமாக, சென்னையிலிருந்து அந்தமான் செல்லும் 5 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )